அக்கரைப்பற்றில் அபிவிருத்திப்
பெருவிழா…
அக்கரைப்பற்றில் கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு பூரணமாக்கப்பட்ட
அபிவிருத்திகளில் சிலதையும், ஆரம்பிக்கப்படவிருப்பதில் சிலதையும் உள்ளடக்கிய
"அபிவிருத்திப் பெருவிழா'' இன்ஷா அல்லாஹ்
எதிர்வரும் 15.09.2017, வெள்ளிக்கிழமை - காலை–8.30 முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவிருதாக விழாக்குழுவில் செயலாளர் ஏ.ரீ. நக்கீல் தெரிவித்தார்.
அன்றைய தினம் இறுதியில்அக்கரைப்பற்றுநகர்ப்பகுதியில்மாலை7.00 மணி முதல் பொதுக்கூட்டமும்இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல்வடிகாலமைப்பு அமைச்சருமானறஊப்ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்,
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்
எஸ்.தண்டாயூதபாணி, கிழக்கு மாகாண
வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும்கட்சிமுக்கியஸ்தர்கள்கலந்துகொள்ளவுள்ளனர்.
1. பறக்கத் நகர்
நீர் வழங்கல் திட்டத்தை மக்கள் பாவனைக்கு வழங்கல்
2. பறக்கத் நகர்
பள்ளிவாயல் மற்றும் வீதி நிர்மாணத்தை ஆரம்பித்தல்
3. ஆலிம் நகர்
வீதிகளை மக்கள் பாவனைக்கு வழங்கல்
4. பள்ளிக்குடியிருப்பு
வீதிகளை ஆரம்பித்தலும், முடிவுற்றவற்றை பாவனைக்கு வழங்கலும்
5. பள்ளிக்குடியிருப்பில்
புதிய பாடசாலை ஆரம்பித்தல்
6. பள்ளிக்குடியிருப்பு
முகம்மதியா வித்தியால புதிய கட்டிடம் திறத்தல்
7. பள்ளிக்குடியிருப்பு
வைத்தியசாலைக்கான புதிய கட்டிட அடிக்கல் நடல்
8. அக்கரைப்பற்று – 06 ஆம் குறிச்சி சுகாதார நிலையம் திறத்தல்
9. பதூர் பாடசாலை
வீதியை பாவனைக்கு வழங்கல்
10. மீராவோடை
வாவிக்கரைப்பூங்கா கட்டம் – 01 யை பாவனைக்கு
வழங்கலும் இரண்டாம் கட்ட ஆரம்பமும்
11. சம்சுல் உலூம்
வித்தியாலயம் தரம் உயர்த்தல்
12. ஸாஹிரா
வித்தியாலயம் தரம் உயர்த்தல் (பெண்கள் பாடசாலை)
13. கடற்கரை வீதியின்
நிர்மான இறுதிக்கட்ட அங்குரார்ப்பணம்
14. MOH கட்டிட
விரிவாக்கப்பட்ட பகுதி திறத்தல் (இரண்டாம் கட்டம்)
15. அக்கரைப்பற்று
பொது விளையாட்டு மைதான அபிவிருத்தியை ஆரம்பித்தல்