News Update :

Tuesday, September 26, 2017

TamilLetter

நான் ஏன் ஒருத்தரை மட்டும் காதலிக்கணும்?’ - மனம் மாறிய ஓவியா!



"நான் ஏன் ஒருத்தரையே காதலிக்க வேண்டும் என ஓவியா கேட்டுள்ளார். சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்ற சரவணா ஸ்டோர்ஸ் பேரங்காடி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட போது நடிகை ஓவியா இவ்வாறு கேட்டுள்ளார்.

விழாவில் கலந்துகொண்ட ஓவியாவிற்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓவியா ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்த விழாவில் பேசிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் தான் பாடிய ‘கொக்கு நெட்டக் கொக்கு…’ என்ற பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

அத்துடன், எனக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி. இவ்வளவு அன்பு செலுத்தும் ரசிகர்கள் இருக்கும்போது நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும் எனப் பேசினார். பிக்பாஸ் வீட்டில் ஆரவ் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட்டதாக மறைமுகமாகத் தெரிவிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்ச்சியில் தான் பங்கேற்க உள்ளதாகவும், அப்போது ரசிகர்களைச் சந்திப்பதாகவும், தெரிவித்தார் ஓவியா. இதனால் ஓவியா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-