News Update :

Saturday, September 23, 2017

TamilLetter

விஜயின் மெர்சல் படம் தொடர்பாக - மஹிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் கருத்து





விஜயின் மெர்சல் படம் தொடர்பாக -  மஹிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் கருத்து
 


விஜயின் மெர்சல் டீசரை பார்த்து தாம் மகிழ்ச்சி அடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜயின் மெர்சல் திரைப்பட டீசர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அதைப் பார்த்து தாம் மகிழ்ச்சியடைந்ததாக நாமல் ராஜபக்ஷ, தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சில புதிய பாடல்களைக் கேட்கவும் தாம் ஆவலாக உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 இதே வேளை நாமல் ராஜபக்ஸ முன்னரும் விஜயின் தீவிர ரசிகன் என்று பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-