கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,
‘
சில நாட்களுக்கு முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் சில் துணிகளை விநியோகித்திருந்தார். அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று தற்போதைய முதல் பெண்மணி மீதும் வழக்குத் தொடுக்கப்படலாம்.
3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்கவை சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிடவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்தி, சில் துணிகளை விநியோகித்தார்கள் என்று லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோர் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சில் துணிகளை வழங்கிய அவரது துணைவியாருக்கு மகிந்த ராஜபக்ச மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.