News Update :

Monday, September 4, 2017

TamilLetter

மைத்திரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹிந்த!


இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது 66வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல அரச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

எனினும் ஜனாதிபதிக்கு முதன்முதலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொலைபேசி அழைப்பின் ஊடாக வாழ்த்து பரிமாற்றம் செய்யப்பட்டதாக செயலகம் தெரிவித்துள்ளது.

சமகால மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்நிலையில் முதன்முறையாக நேற்று மஹிந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறிய மைத்திரி, அப்போதைய ஜனாதிபதிக்கு எதிராக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக மைத்திரி - மஹிந்த ஆகியோருக்கிடையில் மனக்கசப்பு நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மைத்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச டுவிட்டர் ஊடாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வாழ்த்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நன்றி தெரிவித்திருந்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-