அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க போதுமான பணம் இல்லாத காரணத்தினாலே 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளக சுற்றறிக்கை மூலம் இந்த தகவல் நேற்று முன்தினம் அமைச்சின் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சின் இந்த நடவடிக்கை யால் ஊழியர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சர்களின் தேவையற்ற போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களுக்கு அதிகளவான பணம் செலவிடப்படுகிறது. வாரத்திற்கு சுமார் 100 மில்லியன் ரூபா செல்விடப்படுகின்றது.
எனினும் ஊழியர்களின் கொடுப்பனவுகள் முறையற்ற வகையில் குறைக்கப்படுவதாகவும் ஊழியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.