News Update :

Saturday, September 30, 2017

TamilLetter

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சாதுரியத்தால் ஆளுனர் பதவி

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சாதுரியத்தால் ஆளுனர் பதவி



கிழக்கு மாகாணத்தின் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ்  தம்வசப்படுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் வியூகம் வகுத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு சிறுபான்மை முஸ்லிம்கள் நூறு வீதம் பங்களிப்பு செய்த நிலையில் நாட்டின் எதிர்கால நலன் கருதி அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸ் பெரும் பங்காற்றியுள்ளது.

இப்படியான சூழ்நிலையில் கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் சமூகங்கள் பயன்பெறக் கூடியவாறு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என தேசிய மட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்மந்தப்பட்ட தரப்பினரோடு பேசியுள்ளதாகவும் பேச்சு வார்த்தை வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இன்னும் சில வாரங்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் சிபாரிசு செய்யப்படும் நபர் ஆளுனர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-