News Update :

Saturday, September 9, 2017

TamilLetter

தீர்ப்பை கேட்டு பிரதமர் திகைப்படைந்தார் : மஹிந்த


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிரான தீர்ப்பைக் கேட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விபயப்படைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தலதாமாளிகைக்குச் சென்று வழிப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்களாக நாம் நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமையப்பெற்றுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினூடாக சமுர்த்தி மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை தெளிவுப்படுத்தினோம். மேலும் அது சம்பந்தமாக பரிசீலிக்குமாறு பிரதமரிடம் வேண்டிக்கொண்டோம்.

அத்துடன் லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக தீர்ப்பு சம்பந்தமாக மேன்முறையீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இதேவேளை குறித்த தீர்ப்பை கேள்விப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆச்சரியமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-