News Update :

Wednesday, September 13, 2017

TamilLetter

நேற்று அதிர்ச்சியளித்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் செயல்

நேற்று அதிர்ச்சியளித்த  முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் செயல்
எஸ். பர்ஸாத்

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கி சுமார் 15 வருடங்கள் அமைச்சராகவும் இருந்து வந்துள்ளார்.

அதாஉல்லாவினால் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.எந்தவொறு அபிவிருத்தி திட்டத்திலும் மறைந்த தலைவர் அஷரப் அவர்களின் பெயரை சூட்டவில்லை அதற்கு மாறாக தனது பெயரையும் தனது உறவினர்களின் பெயரையுமே எல்லா இடங்களிலும் பதித்து வந்தார்.

அத்தோடு தேர்தல் சுவரொட்டி தொடக்கம் சாதாரண விழா நிகழ்வுகளிலும் கூட பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் புகைப்படங்களை அதாஉல்லா பொறித்ததில்லை.இதற்கு பல காரணங்கள் உண்டு அதாஉல்லா அதிகாரத்தில் இருக்கும் போது அவர் மக்களை நம்பவில்லை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை நம்பினார், பின்னர் மஹிந்தவை நம்பினார் அவர்கள் எப்படியோ தன்னை தேர்தலில் வெல்ல வைப்பார்கள் என்று. அதனால்தான் தலைவர் அஷரப் அவர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக மஹிந்தவின் புகைப்படங்களை அவர் பயன்படுத்தி வந்தார்.

இன்று அதாஉல்லாவின் வெற்றிக்கு மக்கள் தேவைப்படுகின்றனர். மக்களை இது  கவரும் என என்னி சில விடயங்களை செய்ய முனைகிறார்.

வாகனத்தில் செல்லும் போது கண்ணாடியை திறக்காத அதாஉல்லா   எந்த மரண வீட்டுகளுக்கும் திருமண வீடுகளுக்கும் சென்று புகைப்படம் பிடித்து அதை  வெளியிட்டும் வருகிறார்.

அதைபோல் நேற்றும் ஒரு புதிய விடத்தை செய்துள்ளார் அதாஉல்லா அது என்னவென்றால் பத்திரகையாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக பயன்படுத்திய பெனரில் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் புகைப்படத்தை அச்சிட்டுள்ளார்.

பதவி அதாவுல்லாவை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை பாருங்கள்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-