கடந்த வாரம் விலைமதிப்புமிக்க ஆடம்பரக்
கார் ஒன்றை வாங்கிய பிரி கெல்லர், காரை வாங்கிய 7ஆவது நாள் இரவு தனது இரு
சகோதரர்களான ஸ்டீவ் மற்றும் ஜெஃப் ஆகியோருடன் காரில் வெளியே சென்ற போது அது
விபத்துக்கு உள்ளானது.
இரவு 3 மணியளவில் வேகமாக சென்றயாவருடைய
கார் கட்டுப்பாட்டை இழந்தது. விபத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த. காரில்
இருந்த பிரி கெல்லர் உள்ளிட்ட அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

காரில் இருந்த மற்றொரு நபரான ஜோசப் பகாலா
(வயது 39) என்பவரை போலீசார் உயிருடன் மீட்டனர். பகாலாவை வெளியே
எடுத்துவுடன் கார் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. இதில் பிரி கெல்லர்
மற்றும் அவரின் சகோதரர்கள் உடல் கருகி இறந்தனர்.
இவர்களது மரணச் செய்தி குறித்து அறிந்த
குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். பிரி கெல்லரின்
பெற்றோரும், காதலரும் மீளாத சோகத்தில் மூழ்கினர்.
"என் மகள் வருவாள், வருவாள் என்று வாசல்
பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவள் கடைசி வரை வந்து
சேரவேயில்லை என பிரி கெல்லரின் தந்தை பீட்டர் பிரான்சிஸ் வேதனையுடன்
கூறினார். கார் தீப்பிடித்து எரிந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக
வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.