News Update :

Wednesday, September 27, 2017

TamilLetter

ரிஷாட்டின் தலைமையை ஏற்றால்தான் அதாஉல்லாவுக்கு பதவி







 நாஸீத் எம்.எல்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீண்டும் எந்த பதவிக்கு வரவேண்டுமென்றாலும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் ஆசிர்வாதம் வேண்டுமென கிண்ணியா பவுன்டேஸன் தலைவர் எம்.ஏ. சிறாஜ் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா 15 வருடங்கள் அதிகாரத்தில் இருக்கும் போது செய்ய முடியாததை அதிகாரமற்ற நிலையில் செய்யத் துடிக்கிறார்.

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கின்றது. அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் அந்த மாவட்டத்தில் தனித்து போட்டியிட முடியாமல் பெரும்பான்மை கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட நிலையிலும் அவர் தோல்வியடைந்தார்.

இப்படியான நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா விமர்சித்து வருகிறார்.அதே வேளை அவரின் கட்சிக்காரர்கள் அமைச்சர் ரிஷாட்டின் பின் கதவு வழியாக சென்று வருகின்றனர்.

ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் ரிஷாட்டை அதாஉல்லாவின் விமர்சனங்கள் ஒன்றும் செய்துவிட  முடியாது.

அமைச்சர் ரிஷாட்டின் தலைமையை அதாஉல்லா ஏற்றுக் கொள்வாராயின் அதாஉல்லா இழந்த அதிகாரத்தை அமைச்சர் ரிஷாட்டினால் பெற்றுத்தர முடியும்.

அதை விட்டுவிட்டு மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுவதால் ஒரு போதும் அவரால் எதையுமே சாதிக்க முடியாத என்று தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-