News Update :

Thursday, September 21, 2017

TamilLetter

சட்டம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது : மகிந்த கவலை


மாகாண சபைகளுக்கான தேர்தல் சீர்திருத்தச் சட்டம் மூலமாக இந்நாட்டின் சட்டங்கள் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த கவலை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளின் தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கம் கொண்டு வந்த திருத்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தினால் புறக்கணிக்கப்பட்டது.
இதனையடுத்து மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்தவுடன் அவை தானாகவே கலைந்து விடும்.

எனினும் அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தச் சட்டம் காரணமாக மாகாண சபைகளின் தேர்தல்கள் தள்ளிவைக்கப்படும். எல்லைநிர்ணயத்தை முன்வைத்து உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் இரண்டரை வருடங்களாக பிற்போட்டு வருகின்றது.

இதேவேளை, மாகாண சபைகளுக்கும் அதே வழிமுறையைக் கையாண்டு தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தனது அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-