பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க எரிகாயங்களுடன் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவலையில் அமைந்துள்ள தனது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டதால் அவரது கை மற்றும் கால் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்றுவரும் கீதா குமாரசிங்கவை சுகம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.