News Update :

Wednesday, September 13, 2017

TamilLetter

மாகாண சபை உறுப்பினர்களான உதுமாலெப்பை சுபையிரின் உண்மையை போட்டுடைத்தார் தவம்

 மாகாண சபை உறுப்பினர்களான உதுமாலெப்பை சுபையிரின் உண்மையை போட்டுடைத்தார் தவம்


கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 20வது சரத்தின் நகல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதால் அதனை சபையில் முதலமைச்சர் வாசித்தார்.ஆங்கிலம் புரியாத மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபையிர் மற்றும் உதுமாலெப்பை ஆகியோர் அதனை விளங்கிக் கொள்ள முடியாததால் ஏற்பட்ட குழப்பமே தவிர வேறு ஒன்றுமில்லை என கிழக்கு மகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 10 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட பல திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் பொதுக் கூட்டமும் நேற்று (12) இடம் பெற்றது.
இதில் விசேட பேச்சாளராக கலந்து கொண்ட போதே தவம் இவ்வாறு தெரிவித்தார்.

தவம் தொடர்ந்து உரையாற்றுகையில்

20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விரிவான விளக்கம் தெரியாத காரணத்தினால் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் அதை எதிர்க்க முற்பட்டனர்.இதற்கு பிரதான காரணம் உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ள 20வது சரத்தின் நகல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது அதையே முதலமைச்சர் சபையில் வாசித்தார்.இதை விளங்கிக் கொள்ள முடியாததற்கு முதலமைச்சர் எதுவும் செய்ய முடியாது.அதற்காக இவர்களுக்கு சபையில் ஆங்கிலப்பாடம் கற்பிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை என கூறினார் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்

இரண்டு உறுப்பினர்களின் நிலையை மக்கள் மத்தியில் கூறியதால் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் பேச்சுக்கு பலத்த கரகோசம் மக்களால் எழுப்பப்ட்டன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-