News Update :

Friday, September 1, 2017

TamilLetter

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் பெருநாள் செய்தி



கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் பெருநாள் செய்தி


தியாகத் திருநாளை கொண்டாடும் அனைத்து ஈமானிய  நெஞ்சங்களுக்கும் புனித ஈதுல் அல்ஹா பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஈத் முபாரக்.

நீண்ட காலமாக மியான்மர் நாட்டில் நிலவி வரும் பௌத்த மதத்தைச் சாராத பர்மியர்களுக்கு எதிரான இனப் பாகுபாடு சமீப காலத்தில் அதிர்ச்சி தரக் கூடிய அளவில் அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய சமூகம் ஒன்றுக்கு எதிராக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களும் மைய நீரோட்ட பர்மிய கட்சிகளும் துறவிகளும் புதிதாகக் கிளம்பியிருக்கும் மதவெறி அமைப்புகளும் ஊடகங்களும் சமீப காலமாக மாபெரும் இனவாத ஒடுக்குமுறையில் இறங்கியிருக்கிறார்கள். 

சிறுவர்,பெரியோர் என்று பாராமல் எமது சகோதர முஸ்லிமகளின் உயிர்கள் மிகவும் கொடூரமான முறையில் காவு கொள்ளப்படுவதோடு, பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டும், சொத்துக்கள் உடைமைகள் எல்லாம் நிர்முலமாக்கப்பட்டு  வருகின்றன.

தியாகத்தை உணர்த்தும் இந்த குர்பானியப் பெருநாளில் அம்மக்களின் பாதுகாப்புக்காக நானும் நீங்களும்   எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம்  என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
 




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-