அக்கரைப்பற்று இராணுவ முகாமின் பின்புற கடற்கரை பிரதேசத்தில், பாரிய திமிங்கிலம் ஒன்று, உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
சுமார் 30அடி மதிக்கத்தக்க இத்திமிங்கிலம், 30 தொன் எடை இருக்கலாம் என கருதப்படுகின்றது.
குறித்த கடல் பிரதேசத்தில்; அதிகளவு திமிங்கிலங்கள் காணப்படும் அதேவேளை, இத்திமிங்கிலம் சில நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.