News Update :

Sunday, September 24, 2017

TamilLetter

வெடிக்கத் துடிக்கிறது பாலி எரிமலை! 35 ஆயிரம் பேர் வெளியேற்றம்!




பாலித் தீவிலுள்ள எரிமலை, எந்த நேரத்திலும் வெடித்துப் பொங்கக்கூடும் என்பதால் இப்பகுதியிலுள்ள வீடுகளில் இருந்து கிட்டத்தட்ட 35,000 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். 

இங்குள்ள 'மவுண்ட் அகோங்' என்றழைக்கப்படும் அந்த எரிமலை, தொடர்ந்து நில அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. எரிமலை நெருப்புக் குழம்பு எந்த நேரத்திலும் வெடித்து வெளியேறும் அபாயம் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எரிமலைக்ச் சுற்றி 12 கிலோமீட்டர் பரப்பளவுக்கு மக்கள் யாரும் இருக்கக்கூடாது என அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள், எரிமலை வட்டாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பள்ளிகளிலும், பொது மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பாலியின் சுற்றுப் பயண மையப் பகுதிகளில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த எரிமலை உள்ளது. கடந்த 1963-ஆம் ஆண்டில் இந்த எரிமலை வெடித்த போது 1000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
   

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-