News Update :

Friday, September 8, 2017

TamilLetter

அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் 27 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி - தவத்தி்ற்கு நன்றி

ஏ.எல்.றமீஸ்
 

அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் 27 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி - தவத்தி்ற்கு நன்றி



அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் சுமார் 27 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது
 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மேற் கொண்ட முயற்சியின் பலனாக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத் திட்டத்திற்காக நகர திட்டமிடல் அமைச்சு 23 மில்லயின் ரூபாவும்,விளையாட்டுத்துறை அமைச்சு 4 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்துள்ளது.
 

மைதான அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு செய்த நகர திட்மிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோருக்கு அக்கரைப்பற்று மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
 

மேலும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அழிக்கப்பட்ட ஏழுவெட்டுவான் மைதானத்திற்கு பதிலாக புதிய மைதானம் அமைப்பதற்கு அரும் பாடுபடும் மாகாண சபை உறுப்பினர் தவத்திற்கு விளையாட்டு வீரர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-