20ஆம் திருத்தச் சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சுட்டிக்காட்டப்பட்ட இரண்டு பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன்படி மாகாண சபைகளின் அதிகாரக் காலம் நிறைவடைந்தப் பின்னர், அதனை 2 வருடங்களுக்கு நீடிக்காமல் நீடிப்புக் காலத்தை ஒரு வருடத்துக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாண சபைகளின் தேர்தல் தினத்தை நாடாளுமன்றம் அல்லாமல், தேர்தல் ஆணைக்குழுவே (சட்ட அடிப்படையில்) தீர்மானம் செய்யும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏதேனும் காரணத்துக்காக மாகாண சபை கலைக்கப்படும் பட்சத்தில், 18 மாதங்களுக்கு குறைவான அதிகாரம் கொண்டிருந்தால் அதனை ஆளுநர் கட்டுப்படுத்துவார் என்றும், அல்லாத பட்சத்தில் இடைத்தேர்தல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 20ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.