துனிசியாவுக்கு அருகே மத்திய தரைக் கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த நகரம் சுமார் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி காரணமாக கடலில் மூழ்கியது என நம்பப்படுகிறது.
கி.பி.365-ஆம் ஆண்டு கடலில் ஏற்பட்ட
சுனாமியால் எகிப்திலுள்ள அலெக்சாண்ட்ரியா நகரமும் கிரேக்கத்திலுள்ள கிரேட்
தீவும் கடலில் மூழ்கின என்பது ஏற்கனவே அறியப்பட்ட விஷயமாகும்.

இந்நிலையில் துனிசியா நாட்டின் அருகே
மத்தியதரைக் கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று
கடலில் மூழ்கி இருப்பது இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
4-ஆம் நூற்றாண்டில் நியொபொலிஸ் என்ற நகரம்
கடலில் மூழ்கியதாக தகவல்கள் உள்ளன. தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள
நகரம், ஒருவேளை நியோபொலிஸ் நகரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நகரில் ஏராளமான கட்டடங்கள்
தண்ணீருக்குள் மூழ்கி இருப்பது தெளிவாக புலப்படுகின்றன. மேலும், அந்த
நகரில் அப்போதே பல்வேறு தொழிற்சாலைகள் இருந்திருப்பதும் அவையும் கடலில்
மூழ்கியிருப்பது தெளிவாக புலப்படுகிறது.
ஒரு தொழிற்சாலையில் 100 பெரும் தொட்டிகள்
அமைக்கப் பட்டுள்ளன. இந்தத் தொழிற்சாலை, இரசாயனம் தயாரிக்கும்
தொழிற்சாலையாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.