News Update :

Thursday, September 28, 2017

TamilLetter

புதுடெல்லிக்குப் பறக்கின்றனர் மாகாணசபையின் 16 உறுப்பினர்கள்!







எஸ்.எம்.பாரீஸ்

மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர், இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அடுத்த மாதம் எட்டாம் திகதி பயணமாகவுள்ளனர் என்று   அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் 106ஆவது அமர்வு, கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போதே அவைத்தலைவர் இதனைத் தெரிவித்தார்.

 புதுடெல்லியில், அடுத்த மாதம் எட்டாம் திகதி இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றுக்காகவே, மாகாண சபை உறுப்பினர்களான, த. குருகுலராஜா, திருமதி அனந்தி சசிதரன், பா. டெனிஸ்வரன், ப. சத்தியலிங்கம், சி. தவராஜா, அ. பரஞ்சோதி, இ. ஆனோல்ட், க. சிவநேசன், சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, பி. சிராய்வா, அ. அஸ்மின், றி. பதியுதீன், கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், து. ரவிகரன், க. தர்மலிங்கம், சி. அகிலதாஸ் ஆகியோர் செல்கின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-