News Update :

Thursday, August 3, 2017

TamilLetter

கரடிக்கு உணவளிக்க முயன்ற ஆசாமி கரடியிடமே சிக்கிய கொடுமை! -(VIDEO)

 தாய்லாந்தில் உள்ள ஒரு கோவிலில் விளையாட்டாக கரடிக்கு உணவளிக்கச் சென்ற ஆடவர் ஒருவர் கரடியால்  கடித்துக் குதறப்பட்டார்.

நைபும் பிரோம்ராத் என்ற 36 வயதுடைய ஓர் ஆடவரும் அவரது 4 நண்பர்களும் பெட்சபுனில் அமைந்துள்ள லுவாங் போர் என்ற ஓர் ஆலயத்திற்கு சென்றனர். 
அங்குள்ள கரடி ஒன்றுக்கு விளையாட்டாக உணவளிக்க முயற்சித்த போது ஆத்திரமடைந்த அந்தக் கரடி நைபுமை சட்டென்று தனது கூட்டிற்குள் இழுத்துப் போட்டது.
சற்றும் எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் பதற்றமடைந்த அவரின் நண்பர்கள் அந்தக் கரடியைக் குச்சியைக் கொண்டு அடித்தும் அதன் மேல் தண்ணீரை ஊற்றியும் விரட்ட முயற்சித்தனர். எனினும், அனைத்துமே தோல்வில் முடிந்தது.
அந்தக் கரடி சம்பந்தப்பட்ட ஆடவரை போட்டு கடித்துப், பிராண்டி எடுத்தது. இறுதியில் தனது கூட்டினுள்ளே அவரை இழுத்துக்கொண்டு சென்றது. 
இருப்பினும், கடும் போராட்டத்திற்கு பின்னர் சிலர் ஒன்று சேர்ந்து அவரைக் காப்பாற்றினர். இப்பொழுது, அவர் அருகிலுள்ள ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
பண நெருக்கடியால் சில நாட்களாக அந்தக் கரடிக்குப் போதிய உணவு கொடுக்காததே அதன் கோ[பத்திற்குக் முக்கிய காரணம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-