நோர்வேயும் அதாஉல்லாவும் – ஏ.எல்.தவம்
நானும் தலைவனடா
நாடறிந்த நடிகனடா
நாலும் தெரியுமடா
நான்கு மொழி புரியுமடா
வந்தால் அதிரும்
வாயெல்லாம் கிழியும்
வடக்கென்பேன்
கிழக்கென்பேன்
வாயால் வடை சுடுவேன்
எனக்கென இருக்குதுடா
எதுக்கு நான் அஞ்ச
கிடைத்தால் பின்னுவேன்
கேட்டதற்கெல்லாம் விடை தருவேன்
நோர்வே இருக்கும் வரை
நொட்ட இயலா என்னிடம்
ரணிலை பிழை என்பேன்
அதில் – றஊப் ஹக்கீமைப்
பின்னி விடுவேன்
என்ன கேட்டாலும்
என்னிடம் விடையுண்டு
கிழக்கு;
நோர்வே;
ரணில்;
றஊப் ஹக்கீம்;
நான்கு சொல்லில் - நான்
ஞானி ஆவேன்
நான் நான் நான்
நான்தான் எல்லாமே
நானன்றி வேறில்லை
என்னில் குறையில்லை
ஏதும் தவறில்லை
பள்ளிகள் உடைத்ததை
பகுத்தறிவில் சரி கண்டேன்
பர்தாக்கள் களைவதை
பரவாயில்லை என்று நான் சொன்னேன்
அளுத்கம எரிந்ததில்
எதிரியில் குறை உண்டோ?
மதரசாக்கள் இல்லையென்றால்
மக்கள் ஓத மாட்டார்களா?
ஹலால் இல்லை என்றால்
‘’ஹவ்வாக்கள்’’ இறந்தா போய் விடுவர்?
கேட்டது பிழையா?
என்னில் குறையா?
இது ஒரு சாமானா?
எம்.பி ஆக்கு
என்னை மீண்டும் - நீ
நம்பி ஆக்கு
மகிந்தவே நமக்குச் சரி
அவர் மகத்துவமே
எனக்குக் குறி
அதுவே என் வெறி
நானும் தலைவனடா
நாடறிந்த நடிகனடா
நாலும் தெரியுமடா
நான்கு மொழி புரியுமடா
வந்தால் அதிரும்
வாயெல்லாம் கிழியும்
''வரலாறு முக்கியம் அமைச்சரே!
வரலாறு முக்கியம்''
வாயெல்லாம் கிழியும்
வடக்கென்பேன்
கிழக்கென்பேன்
வாயால் வடை சுடுவேன்
எனக்கென இருக்குதுடா
எதுக்கு நான் அஞ்ச
கிடைத்தால் பின்னுவேன்
கேட்டதற்கெல்லாம் விடை தருவேன்
நோர்வே இருக்கும் வரை
நொட்ட இயலா என்னிடம்
ரணிலை பிழை என்பேன்
அதில் – றஊப் ஹக்கீமைப்
பின்னி விடுவேன்
என்ன கேட்டாலும்
என்னிடம் விடையுண்டு
கிழக்கு;
நோர்வே;
ரணில்;
றஊப் ஹக்கீம்;
நான்கு சொல்லில் - நான்
ஞானி ஆவேன்
நான் நான் நான்
நான்தான் எல்லாமே
நானன்றி வேறில்லை
என்னில் குறையில்லை
ஏதும் தவறில்லை
பள்ளிகள் உடைத்ததை
பகுத்தறிவில் சரி கண்டேன்
பர்தாக்கள் களைவதை
பரவாயில்லை என்று நான் சொன்னேன்
அளுத்கம எரிந்ததில்
எதிரியில் குறை உண்டோ?
மதரசாக்கள் இல்லையென்றால்
மக்கள் ஓத மாட்டார்களா?
ஹலால் இல்லை என்றால்
‘’ஹவ்வாக்கள்’’ இறந்தா போய் விடுவர்?
கேட்டது பிழையா?
என்னில் குறையா?
இது ஒரு சாமானா?
எம்.பி ஆக்கு
என்னை மீண்டும் - நீ
நம்பி ஆக்கு
மகிந்தவே நமக்குச் சரி
அவர் மகத்துவமே
எனக்குக் குறி
அதுவே என் வெறி
நானும் தலைவனடா
நாடறிந்த நடிகனடா
நாலும் தெரியுமடா
நான்கு மொழி புரியுமடா
வந்தால் அதிரும்
வாயெல்லாம் கிழியும்
''வரலாறு முக்கியம் அமைச்சரே!
வரலாறு முக்கியம்''