News Update :

Thursday, August 3, 2017

TamilLetter

சவூதியில் தாக்குதல் - வெளியேறும் மக்கள்,




சவூதி அரேபியாவின் கிழக்கு பகுதியிலுள்ள அவாமியா நகரில் இடம்பெற்று வரும் தாக்குதல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
அவாமியாவில் பாதுகாப்பு படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதனாலேயே மக்கள் தங்களின் இடங்களை விட்டு வெளியேறுகின்றனர்.
சவூதி அரேபியாவில் ஷியா போராளிகளின் மறைவிடமாக விளங்கிவரும் குறித்த பகுதியை மீட்பதற்கு பாதுகாப்பு படையினர் கடந்த மே மாதம் முதல் படை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த மோதல்களில் இதுவரை இரண்டு பாதுகாப்பு படையினர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு அருகிலுள்ள நகரத்தில் தற்காலிக தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சவுதி படையினர் வீடுகள் மற்றும் வாகனங்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், வீட்டைவிட்டு வெளியேறாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மோதல் நடக்கும் குறித்த பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளமையினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை இந்த தாக்குதல்களினால் குறித்த நகரம் முழு முற்றுகைக்கு உட்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-