News Update :

Sunday, August 6, 2017

TamilLetter

இன்று சந்திர கிரகணத்தை இலங்கையில் பார்வையிடலாம்



பௌர்ணமி தினமான இன்று தோன்ற உள்ள சந்திர கிரகணத்தை இலங்கையில் பார்வையிடலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் இலங்கையில் சுமார் 5 மணித்தியாலங்கள் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மணித்தியாலங்கள் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது பூரண கிரகணம் அல்ல என்றும் சந்திரன் பகுதியளவிலேயே மறைந்து காட்சியளிக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சந்திர கிரகணத்தை இலங்கை உட்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் காணலாம் என்று தெரிவித்த வானிலை ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் சந்திர கிரகணம் தோன்றும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இந்த நிகழ்வு நடைபெறும் நேரமானது பகல் வேளையாக இருக்கும் என்பதால் அங்கு கிரகணத்தைக் பார்க்க முடியாது.
இலங்கையில் இன்று இரவு 9.20 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கிரகணம், நாளை அதிகாலை 2.21மணியுடன் நிறைவடையும்.
பொதுவாக, நிலவின் மீது பட வேண்டிய சூரியக் கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகின்றது.
பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள் சூழ்ந்தது போன்று சந்திரன் காட்சியளிக்கும். சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்று கோள்களும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற இரு சந்திர கிரகணங்கள், அடுத்த வருடம் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களிலும் தோன்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-