பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக யுத்தகளத்தில் இருந்த இராணுவத்தினரே எனக்கு அறிவித்தனர். அவரை உயிருடன் பிடிக்கவுமில்லை. அதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவுமில்லை என இறுதி யுத்தத்தின் உக்கிர மோதல் குறித்து கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மே மாதம் 16ஆம் திகதி இரவு வேளையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன்போதே அவர் உயிரிழந்திருக்கலாம்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அவருடைய மெய்ப்பாதுகாவலர்களுடன் பதுங்கி இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனின் இருப்பிடத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டனர்.
இதன்போது பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில்தான் பிரபாகரன் உயிரிழந்திருக்க வேண்டும்.
ஒரு பக்கத்தில் இருந்து தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பிரபாகரனின் உடலை பார்க்கும் போது இது தெரிகின்றது.
எனினும் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி அப்போது களத்திலிருந்த இராணுவத்தினரே என்னிடம் கூறினார்கள்.
அவரை ஒருபோதும் உயிருடன் பிடிக்கவில்லை. அவருடைய உடல் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது என்றே கூறப்பட்டது. அவரை உயிருடன் பிடித்தமைக்கான எந்த தடயங்களும் இல்லை. அதற்கான புகைப்படங்களும் இல்லை, அந்த சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை என கோத்தபாய மனந்திறந்து குறிப்பிட்டுள்ளார்.