News Update :

Friday, August 18, 2017

TamilLetter

இறக்காமத்தில் அத்துமீறி குடியேறியோரை வெளியேறுமாறு உத்தரவு


இறக்காமத்தில் அத்துமீறி குடியேறியோரை வெளியேறுமாறு உத்தரவு

 

இறக்காமம் குளக்கரை காணிகளில் அண்மைக்காலமாக அத்துமீறிக்குடியேறி நிர்மாணப்பணிகளை மேற்கொண்டோரை உடனடியாக வெளியேறுமாறு நீர்ப்பாசனத்திணைக்களம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ரீ.மயூரன் அத்துமீறி குடியேறியோருக்கு எழுத்துமூலமான பகிரங்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எனினும் குறித்த உத்தரவு அறிவித்தலை அத்துமீறிக்குடியேறியோரின் சுற்றுமதில்களில் ஒட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பலநூற்றாண்டுகளுக்கு முன்னர், நிர்மாணிக்கப்பட்ட குறித்த குளமானது சுமார் 2250 ஏக்கர் விஸ்தீரண பரப்பளவை கொண்டது.

இக்குளத்தை நம்பியே சுமார் 1500 மீனவக்குடும்பங்கள் வாழ்வதுடன் இறக்காமம் ஒட்டுத் தொழிற்சாலையும் இக்குளத்தின் நீரை கொண்டே தனது உற்பத்தியை மேற்கொள்கிறது.

இந்த நிலையில் அண்மைக்காலமாக இறக்காமம் குளக்கரையோரத்தில் குடியிருப்போர் இக்கரையோரக் காணிகளை அத்துமீறி அடாத்தாகக் கைப்பற்றி வருகின்றனர்.

இதனால் குளத்தின் பரப்பளவு குறைந்துள்ளதுடன் மழை காலங்களில் குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பதாகவும், இதனால் குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயத்தை எட்டியுள்ளதாகவும் பிரதேச மக்களால் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சுட்டிக்காட்டியதை அடுத்தே அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவார காலத்திற்குள் சம்பந்தப்பட்டோர் கரையோர காணிகளிலிருந்து வெளியேறாவிடின் நீதிமன்ற உத்தரவின்படி 1979 ஆம் 07 ஆம் இலக்க காணி அபகரிப்பு சட்டத்தின் கீழ் வௌியேற்றப்படுவார்கள் எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-