சுமார் 6 மணி நேரமாக திபேட் சாலையில் உள்ள
5*5 மீட்டர் அளவுக்குக் கொண்ட வீட்டில்தான் இந்த விசித்திரமான நிகழ்வு
நடந்தது. வெயில் காலத்தின் போது இந்த விசித்திரமான சம்பவம் நடந்த வீடியோ
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.
அந்த வீட்டின் உரிமையாளர் சதுரங்கம்
விளையாடிக்கொண்டிருந்ததோடு அந்த தெரு முழுவதும் மழை பெய்வதாக எண்ணிக்
கொண்டிருந்தார். ஆனால், இறுதியாகத்தான் அவர் வீட்டுக்கு மட்டும் மழை
பெய்தது தெரிய வந்தது என அந்த வீட்டின் உரிமையாளர் முஷாகீர் தெரிவித்தார்.
இயற்கையின் விளையாட்டில் இதுவும் ஒன்று
என்றாலும் கடவுள் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு மழை வழி நேரடியாக ஆசிர்வாதம்
வழங்கியுள்ளார் எனக் கூறி நெட்டிசன்கள் காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர்.