இன்று கிழக்கு மாகாண சபை என்ன
முடிவெடுக்கும்
இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு இன்று கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்காக கிழக்கு மாகாண சபைக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக விசேட அமர்வை கிழக்கு மாகாண சபை கூடி ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பாக
வாக்கெடுப்பு
நடத்தப்படவுள்ளது.
20வது அரசியலமைப்பு திருத்த வரைவின் மூலம், மாகாணசபைகளின் அதிகாரங்கள் நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படுவதுடன் கிழக்கு மாகாண சபையின் காலத்தை நீட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.