இலங்கையின் தலைநகர் கொழும்பில் இராணுவத்தினர் போராட்டம்
இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இன்று கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்கிறது.
தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என
தெரிவித்து அந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த இயக்கத்தின் தலைவர்
யூ.டி வசந்த தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இருந்து ஜனாதிபதி
செயலகம் வரையில் பாதயாத்திரை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இன்று அதிகாலை முதல் காலி முகத்திடம் நுழைவு வாயிலான லோட்டஸ்
சுற்றுவட்டம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரையில் காவல்துறை கழகம் அடக்கும்
பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர்
குறிப்பிட்டுள்ளனர்.
Monday, August 7, 2017
கொழும்பில் இராணுவத்தினர் போராட்டம்!!

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-