News Update :

Wednesday, August 23, 2017

TamilLetter

மகனின் பரீட்சைக்கு திருட்டு வேலை செய்த உயர் பொலிஸ் அதிகாரி சிக்கினார்
கல்விப் பொதுத் தரா­தர உயர்தரப் பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாடம் -2017, பகுதி இரண்டு வினாத்தாளினை பரீட்சை இடம் ­பெறும்போதே நவீன தொலைத்தொடர்பு கரு­வி­யினைப் பயன்­ப­டுத்தி மண்­ட­பத்­துக்கு வெளியில் அனுப்பி, கேள்­வி­க­ளுக்­கான விடை­களை எழு­தி­ய­தாக கூறப்­படும் கொழும்பு பிர­பல பாட­சா­லையின் மாணவன் ஒரு­வரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கைது செய்­தனர்.

அவருடன் குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக செயற்பட்ட மாணவனின் தந்தையான நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையின் வைத்தியரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சந்தேக நபரையும் சி.ஐ.டி.யினர் கைது செய்தனர்.

கல்விப் பொதுத் தரா­தர உயர்தர பரீட்சை 2017 இன் இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாட வினா பத்­தி­ரத்தின் பகுதி இரண்டில் கேட்­கப்­பட்­டி­ருந்த வினாக்­க­ளுடன் கூடிய துண்டுப்பிர­சு­ரங்­களை கம்­பஹா மகளிர் பாட­சாலை ஒன்றின் முன்­பாக விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களின் போதே இவ் விருவரையும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கைது செய்­தனர்.

உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகரின் மக­னுக்கு இர­சா­ய­ன­வியல் கேள்­வி­க­ளுக்கு விடை சொல்லிக் கொடுக்க, இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­யவர் என்னும் சந்­தே­கத்தில் தேடப்­படும் மேல­திக வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா ஒப்­பந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதன் பிர­கா­ரமே இந்த வினா பத்­திரம் நவீன கரு­வியைப் பயன்­ப­டுத்தி, வட்ஸ்அப் ஊடாக ஆசி­ரி­ய­ருக்கு குறித்த மாண­வனால் அனுப்­பப்பட்­டுள்­ள­தா­கவும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வாறே குறித்த கேள்­விகள் பெறப்­பட்டு துண்டுப்பிர­சுரம் அச்­சி­டப்­பட்­டுள்­ள­தாக விசா­ரணை ஊடாக உறு­தி­யா­கி­யுள்­ளது. இதனால் பரீட்­சைக்கு முன்­ன­தா­கவே வினா பத்­திரம் வெளி­யா­க­வில்லை என்­பதை குற்றப் புல­னா­ய்வுப் பிரி­
 வினர் ஊர்­ஜிதம் செய்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் ஏற்­க­னவே தேடப்­படும் மேல­திக வகுப்பு ஆசி­ரி­யரின் தந்­தை­யையும் சகோ­த­ர­ரையும் துண்டுப் பிர­சு­ரத்தை வினாத்­தாளில் உள்ள கேள்­வி­க­ளுடன் அச்­சிட்டு வழங்­கிய அச்­சக உரி­மை­யா­ள­ரையும் கைது செய்து எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்ள நிலை­யி­லேயே மேல­திக விசா­ர­ணை­களில் இந்த மாணவனையும் தந்தையான உதவி பொலிஸ் அத்தியட்சகரும் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளனர்.

இதனையடுத்து அவ்விருவரும் நேற்று இரவு கம்பஹா நீதிவான் டி. ஏ .ருவன் பத்திரன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்

நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தரா­தர உயர்தர பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாடத்­துக்­கான வினா பத்­தி­ரத்தின் 3 பிர­தான கேள்­விகள், பரீட்சை நேரத்­துக்கு முன்­ப­தா­கவே வெளி­யா­கி­விட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட நிலையில் அது தொடர்பில் பெற்றோர் சிலர் பரீட்­சைகள் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து பரீட்­சைகள் ஆணை­யாளர் எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மா­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய உதவி பரீட்­சைகள் ஆணை­யாளர் பொலிஸ் மா அதி­பரின் நிவா­ரணப் பிரிவில் அது தொடர்பில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் கவ­னத்­துக்கு குறித்த விவ­காரம் கொண்­டு­வ­ரப்­பட்­டதை தொடர்ந்து, பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உத்­த­ர­வுக்கு அமைய கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­லவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டன்.

இது தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­திய பொலிஸார் குறித்த துண்டுப்பிர­சு­ரத்தை விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் கந்­தான, பட்­ட­கம பகு­தியைச் சேர்ந்த இரு­வரை நேற்று முன்தினம் கைது செய்­தனர். 67 வய­தான நபர் ஒரு­வ­ரையும் அவ­ரது 29 வய­தான மகன் மற்றும் 42 வய­தான அச்­சக உரி­மை­யாளர் ஆகி­யோரைக் கைது செய்­தனர். இத­னை­ய­டுத்து மேல­திக விசா­ர­ணைகளை நடத்துவதற்கான பொறுப்பு குற்றப் புல­னா­ய்வுப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

குற்றப்புல­னா­ய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பணிப்­பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் பிரதிப் பணிப்­பாளர் சானி அபே­சே­க­ரவின் வழி நடத்­தலில் மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்த சம்­பவம் தொடர்பில் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமைய, கொழும்பின் பிர­பல பாட­சாலை மாண­வ­னான குறித்த உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகரின் மகன், பரீட்­சைக்கு செல்லும் போது பரீட்சை வினாத்­தாளை ஸ்கேன் செய்­யத்­தக்க ஒரு­வகை நவீன கரு­வி­யையும், காதில் புளூடூத் உடன் கூடிய கருவி ஒன்­றி­னையும் எடுத்து சென்­றுள்ளான்.

ஏற்­க­னவே இது திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிலையில், அம்­மா­ணவன் நவீன கரு­வியைப் பயன்­ப­டுத்தி, வினாத்­தாளை மேல­திக வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்­பி­யுள்ளார். அதற்கு ஆசி­ரியர் சொல்லிக் கொடுக்கும் விடை­யினை அம்­மா­ணவன் எழு­தி­யுள்ளான். இது தொடர்பில் ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வாறு ஆசி­ரியர் வட்ஸ்அப் மூலம் பெற்ற வினாத்­தாளில் உள்ள வினாக்கள் மூன்­றினை உட­ன­டி­யாக தனது மேல­திக வகுப்­புக்கு மாண­வர்­களை ஈர்க்கும் துண்டுப் பிர­சு­ரத்தில், பரீட்சை இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் போதே இணைத்து அச்­சிட்டு, சகோ­தரன் உத­வி­யுடன் பகிர்ந்­துள்ளார்.

இது தொடர்பில் ஆறு ஊழி­யர்­களை அவர்கள் நாள் சம்­பளம் அடிப்­ப­டையில் பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட மூவ­ருக்கு மேல­தி­க­மாக குற்றப்புல­னா­ய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு மாண­வனை நேற்று கைது செய்தது.

அத்­துடன் தலை­ம­றை­வா­கி­யுள்ள மேல­திக வகுப்பு ஆசி­ரி­யரை கைது செய்ய அவ­ரது தொலை­பேசி பதி­வுகள் உள்­ளிட்ட பல­வற்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். இந்த குற்­றத்­துடன் தொடர்­பு­டைய தொடர்­பாடல் கரு­விகள் சில­வற்­றையும், வழங்­கப்­பட்ட பணத்தில் பெரும்­பா­லான பகு­தி­யையும் மீட்­டுள்ள பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-