News Update :

Sunday, August 13, 2017

TamilLetter

உலக இணைய வேக வரிசை; - தரப்படுத்தல் வெளியானது



சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில்   மற்ற நாடுகளும் இண்டர்நெட் எனப்படும் இணையத்தின் வேகத்தில் பின் தங்கியுள்ளதாக உலக இணைய வேக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் 55.13 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தைப் பதிவுச் செய்து முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

நியூ அமெரிக்கா  தொழில்நுட்ப மையம், கூகுள் ஆய்வு மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிளேனெட்லேப் ஆகியவற்றின் கூட்டு முயற்சியிலான மை-லேப் எனப்படும் ஆய்வு மையம் திரட்டிய தரவுகளின் அடிப்படையில் மலேசியா 6.69 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை கொண்டுள்ளது. இதன் வழி உலக வரிசையில் 63ஆவது இடத்தில் மலேசியா பிடித்துள்ளது.

சுமார் 7.5 ஜிபி கொண்ட எச்டி படத்தை சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 18 நிமிடம் 34 வினாடிகள் பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், அதே படத்தை
மற்ற நாடுகள்
பதிவிறக்கம் செய்ய 2 மணிநேரம் 33 நிமிடங்கள் பிடிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.


இந்த ஆய்வுகள், 189 நாடுகளில் 12 மாதங்கள் நடத்தப்பட்டன. சுமார் 6 கோடியே 30 லட்சம் அகன்ற அலைவரிசையின் வேகத்தை சோதனைச் செய்த பின்னரே கேபள் கோ யுகே நிறுவனம் இந்தத் தரவரிசையை நிர்ணயித்தது.

ஆசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூர் முதல் இடத்தையும் தாய்லாந்து இரண்டாவது இடத்தையும்  மலேசியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-