இன்று எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் பலரும் வையாபுரியை நாமினேஷன் செய்தனர். ஏனென்றால் அவர் வீட்டுக்கு போகனும் என்று கூறுவதால் என்றனர்.
ரைசா மட்டும் சக்தி ஆணாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுகிறார். காயத்ரி கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார் என்று கூறினார்.
இதையடுத்து பிக்பாஸ் ரைசா தவிர அனைவரையும் எவிக்ஷன் நாமினேஷன் செய்து ரைசாவை தலைவியாக்கி விட்டார். இதனால் காயத்ரி, சக்தியின் போக்கு தற்போது மாறத்தொடங்கிவிட்டது.
இதை தொடர்ந்து காயத்ரி கமல் அவரை அசிங்கபடுத்துவதாக கூறி அழுதார். வீட்டுக்கு போகவேண்டும் என்று அவர் கூறினார். சக்தி மற்றும் சினேகன் காயத்ரியை சமாதானம் செய்தனர்