News Update :

Saturday, August 12, 2017

TamilLetter

முஸ்லிம்களின் காணி விவகாரங்கள், தேர்தல் திருத்தச் சட்டங்கள், யாப்பு மாற்றம், இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் குழு ஆராய்வு


முஸ்லிம்களின் காணி விவகாரங்கள், தேர்தல் திருத்தச் சட்டங்கள், யாப்பு மாற்றம், இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் குழு ஆராய்வு


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (12) நிந்தவூரில் இடம் பெற்றது. 

இதில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த 350 கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர.; காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இக் கூட்டம்; பி.ப.2.30 மணிவரை நீடித்தது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றுகையில் தனது அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தார்.அத்தோடு அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினை,யாப்பு மாற்றம்,உள்ளுராட்சி தேர்தல் சட்ட மூலம்,மாகாண சபைத் தேர்தல் முறையும் சட்டமும் என பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து தெரிவித்து இப் பிரச்சினைகளுக்கு கட்சி எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் கூறினார்.

அத்தோடு கட்சியின் பிரதேச மட்ட குழுக்களை புனரமைத்து அதனுடாக அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புகள் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதால் கட்சியின் கட்டுக் கோப்பு பலமடைவதோடு கட்சியின் அடிமட்ட போராளிகள் தீர்மானம் எடுக்கும் நிலையை உருவாகும் என தலைவரால் கூறப்பட்டது.

மேலும்  கட்சியின் முக்கிய பிரதேச தலைவர்களுக்கு தற்கால அரசியல் மாற்றம் தொடர்பாக ஒரு நாள் விளக்க செயலமர்வை நடாத்த கட்சி தயாராகி வருவதாகவும் தலைவர் கூறினார்

இதனைத் தொடர்ந்து பலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். வேலைவாய்ப்பு, அபிவிருத்தி, நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் என பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது    உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்
உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு சாத்தியமான இந்நேரத்தில் உள்ளூராட்சி எல்லைகள் மீள்நிர்ணயம் தொடர்பில் இடம்பெற்றுள்ள விடயங்கள் மற்றும் வட்டாரங்களின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாடுகள் தொடர்பாகவும், மாகாண சபைத் தேர்தல் முறை மாற்றத்தினால் சிறுபான்மை சமூகமான நாம் பல இழப்புக்களைச் சந்திக்க வேண்டி வரும்.

இப்போதுள்ள விகிதார தேர்தல் முறையே முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனவே, பழைய முறைமையே தொடர்ந்தும் இருப்பதற்கு அல்லது புதிய முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளுக்கான காப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள கட்சி முயற்சிக்க வேண்டும் எனவும்,
பாராளுமன்றத் தேர்தல் முறை மாற்றத்தில் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிற விடயங்கள் பேசப்படுகின்றன அவை தொடர்பாகவும், தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையில் முஸ்லிம்கள் தமது விகிதாசாரத்திற்கு ஏற்ற உறுப்பினர்களைப் பெறுகின்றனர். அதனையும் கருத்தில் கொண்டு கட்சி செயற்பட வேண்டும் எனவும்,
யாப்பு மாற்றத்தில் அல்லது புதிய யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படவுள்ளது. முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்பது தொடர்பில் நாம் கவனமாக இருக்க வேண்டுமெனவும் கூறினார்.
மேலும், இன்று கட்சியை விட்டு விலகிச் சென்றவர்கள் கட்சிக்கு எதிராகவும் தலைமைக்கு எதிராகவும் போலியான பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.அவர்களால் பரப்பப்படும் இத்தகைய பிரச்சாரங்களை மக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள். இருந்தும் கட்சியின் பிரதிநிதிகள் அவரவர் பிரதேசத்தில் மக்களை அழைத்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கூறினார்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் விளக்கங்களை வழங்கியதோடு, இது தொடர்பாக இன்னும் விரிவாகப் பேசுவதற்கான செயலமர்வை வெகுவிரைவில் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-