மேலும் தமது நாடுகளின் வான்பரப்பில் கட்டார் விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளன. இருந்தபோதும் அவசரகாலத்தின்போது மட்டுமே 9 வழித்தடங்களை திறக்க அந்நாடுகள் உறுதியளித்துள்ளன.
இதற்கிடையே கட்டார் விமானங்கள் சர்வதேச விமானப்போக்குவரத்து சட்டத்தை மீறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக டுபாயில் இருந்து இயங்கிவரும் அல் அரேபியா தொலைக்காட்சியில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அக் காணொளியில் இடம்பெற்றிருந்த 3டி காட்சியில் கட்டார் பயணிகள் விமானம் மீது ஏவுகணை வீசுவது போல் காட்டப்பட்டிருந்தது.
சர்வதேச வான்வழி சட்டங்களை மீறினால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கலாம். மேலும் விமானங்களை சுட்டுவீழ்த்தப்படும் என்று பகிரங்கமாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
இக் காணொளி உலகம் முழுவதும் முக்கிய செய்தி நிறுவனங்களில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் இது விஷமத்தனமானது என்று கட்டார் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் கட்டார் புகார் அளித்துள்ளது
அல் அரபியாவில் வந்துள்ள செய்தி 1944 சிகாகோ மாநாட்டில் வரையறுக்கப்பட்ட சர்வதேச வான் எல்லை தொடர்பான விதிமுறைகளுக்கு எதிரானது. அக் காணொளி குறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வளைகுடா நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், 2022 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கிண்ண காற்பந்துத் தொடருக்கான முன்னேற்பாடுகளை கட்டார் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒருபகுதியாக அரேபியத் தொப்பி வடிவிலான கால்பந்து மைதானத்தை அமைக்க இருப்பதாக கத்தார் அறிவித்துள்ளது.
தலைநகர் டோகாவில் அமைக்கப்பட இருக்கும் அல் துமாமா மைதானம், பாரம்பரிய ’காஃபியா’ எனப்படும் அரேபியத் தொப்பி வடிவில் அமைக்கபபடவுள்ளது.
40 000 பேர் வரை அமரக்கூடிய வகையில் உருவாக இருக்கும் இந்த மைதானம், கட்டாரைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் சின்னமாக இந்த மைதானத்தை அரேபியத் தொப்பி வடிவில் அமைக்க இருப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹஸன் அல் தவாடி தெரிவித்துள்ளார்.