News Update :

Thursday, August 17, 2017

TamilLetter

நடிகர் அல்வா வாசு சற்று முன் காலமானார் .



அமைதிப்படை படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு.

இவர், வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்து நம்மை சிரிக்கவைத்தவர். தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான இவர், இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

கடந்த ஆறு மாதங்களாக, கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவந்தார். அல்வா வாசுவின் மனைவி அமுதாவிடம், அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை, விரைவில் உயிர் பிரிந்துவிடும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் சற்று முன் காலமானார் .

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-