News Update :

Wednesday, August 30, 2017

TamilLetter

அறுவை சிகிச்சையின் போது சண்டையிட்டுக்கொண்ட மருத்துவர்கள்! குழந்தை பரிதாப பலி


கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களுக்கு இடையே நடந்த மோதலால் பிறந்த குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உமெய்டு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்குகிறார்.

நேற்றைய மாலை அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை அறைக்குள் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மருத்துவர்கள் தங்களுக்குள் ஆவேசமாக பேசி சண்டையிட்டுக்கொண்ட காரணத்தால், பிறந்த குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்தது.

ராஜஸ்தான் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-