News Update :

Monday, August 7, 2017

TamilLetter

மீண்டும் களமிறக்கப்படும் அதாஉல்லாவின் மகன் - ஏக்கத்தில் அவர்கள்

மீண்டும் களமிறக்கப்படும் அதாஉல்லாவின் மகன் - ஏக்கத்தில் அவர்கள்


 ஹனிபா

அக்கரைப்பற்றில் தனது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த மகனை நடக்கவிருக்கும்  மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட வைப்பதற்கு அதாஉல்லா தீர்மானித்துள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் அதாஉல்லா தனது மகனை மேயர் வேட்பாளராக அறிவித்து தன் மகனுக்காக ஒவ்வொறு வீடு வீடாக சென்று வாக்குகள் கேட்டு வெற்றியடைய வைத்தார்.

அதாஉல்லாவின் மகனை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டாமென தேசிய காங்கிரஸின் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அக்கரைப்பற்றின் புத்தி ஜீவீகள பலர்  கோரிக்கை விடுத்தும் கூட அதாஉல்லா அக் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

அக்கரைப்பற்றில் நிறைய ஆளுமை உள்ள பல பேர் இருந்தும் தன் மகன்  மேயராக வர வேண்டுமென்பதற்காக கேவலமான பல சதித் திட்டங்களை அரங்கேற்றிய வரலாறு அதாஉல்லாவுக்கு உண்டு.

இவ்   வருடம்  உள்ளுராட்சி தேர்தல் வட்டார முறையில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் இவ் வேளையில் குறிப்பிட்ட வட்டாரத்தில் மீண்டும் தனது மகனை வேட்பாளராக நியமித்துள்ளார்.

இதே வேளை அதாஉல்லா தனது மகனை இன்னொறு தடவை தேர்தலில் களமிறக்க மாட்டார் என அவரின் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாய்கிழிய வருடக் கணக்கில் கத்திய போதும் அதாஉல்லா அவர்களின்  எந்த சத்தத்தையும்   காதில் போடவில்லை

அதாஉல்லாவும் மகனுமே தேசிய காங்கிரஸ் என்று புரியாத பலர் தான்தான் அடுத்த மேயர் என கனவுலகத்தில் மிதந்தது எல்லாம் வீனாகிப் போய் விட்டதே ராசா

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-