இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை வலியுறுத்தியுள்ளது.
பணிபுரிவதற்காக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இந்த கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கட்டளைச் சட்டத்தின் 51ஆம் பிரிவிற்கும் அதனை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 56ஆவது பிரிவிற்கும் அமைய பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் என பணியகத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று செல்லும் பணியாளர்கள் வரி கொடுப்பனவுகள் உட்பட 17 ஆயிரத்து 837 ரூபாவினை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் அதே நிறுவனத்திற்கு பணிக்கு செல்லும் பணியாளர்கள் பதிவுக்கட்டணமாக மூன்றாயிரத்து 755 ரூபாவினை செலுத்த வேண்டும் என பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களை பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் உள்ள இலங்கை வெளிநாட்டு பணியக செயலகத்தில் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.