News Update :

Friday, August 11, 2017

TamilLetter

வடகொரியாவுடன் போர் ஆரம்பம்




வாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் தேடுதல் வேட்டையில் பிரிட்டனின் போர் விமானங்களும் தங்களுக்கு உதவவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

வடகொரியாவின் அணுவாயுதங்களைத் தாக்கி அழிக்கும் போரில் அமெரிக்கத் குதிக்கத் தயாராகிவிட்டது. இதனால் மூன்றாவது உலகப் போர் கூட வெடிக்கலாம் என்று ஊடகங்களில் தகவல்கள் பரபரப்பாகப் பரவியுள்ளன.

வடகொரியா மறைத்து வைத்திருக்கும் அணுவாயுதங்கள் குறிப்பாக, ஏவுகணைகள் எங்கே உள்ளன என்று தேடி அவற்றைக் கண்டு பிடிக்கும் உளவு வேலைக்குப் பிரிட்டீஷ் விமானங்களின் உதவியை நாடியிருக்கிறார் டிரம்ப்.
அணுவாயுதத் தளங்கள், அதன் பீரங்கி பேட்டரிகள் ஆகியவை எங்கே பதுக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக கண்டறிந்த பின்னர் போரைத் தொடங்கப் போவதாக டிரம்ப் கோடிகாட்டியுள்ளார்.

மிகப்பெரிய அளவிலான உயிர்ச் சேதங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் நட்பு நாடுகள் விரும்புகின்றன. எனவே, போரைத் தொடங்குவதற்கு முன்பே உளவுப் பணிகள் சரிவரச் செய்யப்பட்டால், வடகொரியாவின் முதுகெழும்பை முறித்து விடலாம் என அமெரிக்கா திட்டம் தீட்டுயுள்ளது.

சுமார் 800 மில்லியன் பவுண்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன உளவு விமானங்களை வடகொரியாவிற்கு எதிராக பயன்படுத்தும்படி பிரிட்டனுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருக்கிறது.

வடகொரியாவுக்குள் நிகழும் சில இரகசிய குறியீட்டு உரையாடல்களைக் கண்காணிக்கக் கூடிய ஆற்றல் இந்த நவீன உளவு விமானங்களுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-