News Update :

Monday, August 7, 2017

TamilLetter

அட்டாளைச்சேனை ஒலுவில் சிறுவன் காருக்குள் சடலமாக மீட்பு



அட்டாளைச்சேனை ஒலுவில்
 சிறுவன் காருக்குள் சடலமாக மீட்பு






– ஒலுவில் பிரதேசத்தில் ஐந்து வயதான சிறுவன் ஒருவன் சிற்றூர்தியொன்றினுள் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

 இந்த சிறுவன் அருகில் உள்ள விற்பனை நிலையமொன்றுக்கு சென்றுள்ளதுடன், நீண்ட நேரமாக வீடு திரும்பாமை காரணமாக உறவினர்கள், பிரதேசவாசிகளுடன் இணைந்து அவரை தேடியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது வீட்டுக்கு அருகில் இருந்த சிற்றூர்தியொன்றில் குறித்த சிறுவன் உயிரிழந்த நிலையில், நேற்று மீட்கப்பட்டுள்ளான்.

இந்த சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்திகுள் சென்று கதவுகளை பூட்டியுள்ள நிலையில், முச்சு திணறல் ஏற்பட்டு இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-