படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய இரண்டு நடிகர்கள் விபத்தில் பலி – திரையுலகம் அதிர்ச்சியில்
மகாளானி அன்த் ஹி ஆரம்ப் ஹை என்ற ஹிந்தி தொடர் மூலம் பிரபலமானவர்கள் ககன் காங் மற்றும் அர்ஜித் லவானியா.
இவர்கள் அம்பேர்காவ்னில் 2 நாட்கள் படப்பிடிப்பு முடித்துவிட்டு காரில் மும்பை திரும்பி வந்துள்ளனர்.
அப்போது இவர்களது கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிரக் மீது பயங்கரமாக மோதியது.
வண்டி வேகமாக மோதியதால் காரின் மேற்கூரை பெயர்ந்துவிட்டது. அதோடு நடிகர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இவர்களது விபத்து குறித்து விசாரிக்கையில் காரில் நான்கு பீர் கேன்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.