News Update :

Wednesday, August 16, 2017

TamilLetter

இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பை மீறியுள்ளதா? கட்டார் நாட்டுக்கு எதிராக விசாரணைகட்டார் நாட்டில்  உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலார்களை பாதுகாக்கும் பொருட்டு மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின்( chrad)  ஏற்பாட்டில்  சிவில் அமைப்புக்களும் இணைத்து  நேற்றயதினம் கொழும்பு  பௌத்தாலோக மாவத்தயில் அமைந்துள்ள இலங்கை   தொழில்சார் சங்கங்களின்  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற     ஊடகவியலாளர் சந்திப்பிலையே இவ்  ஊடக அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்

குறித்த அறிக்கையில்
2022இல் சர்வதேச உதைபந்தாட்ட உலகக் கிண்ணப்போட்டிகளை   கட்டாரில் நடாத்துவதற்கு அந்நாட்டுக்கு  அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  அதனைத்; தொடர்;ந்து  மிகவும் நவீனமயமான 12 விளையாட்டு அரங்குகளை நிர்மாணிக்கும் நடைமுறையில் கட்டரர் அரசாங்கம்  ஈடுபட்டு  உள்ளது. இந்நோக்கத்திற்காக  2 மில்லியன் புலம்பெயர் பணியாளர்கள்  பிரதானமாக தென் ஆசிய  தென் கிழக்காசிய மற்றும்
ஆபிரிக்கப் பிராந்தியங்களில் இருந்து  மேற்கூறிய கட்டுமானப் பணிகளை முடிப்பதற்குஆட்சேர்க்கப்பட்டுள்ளனர்.

 
உலகக் கிண்ண போட்டியை நடாத்துவதற்கான நிர்ணய விலையை  கட்டார் வெற்றியீட்டிய வருடமான 2010 முதல் கட்டாருக்கு இலங்கையில் இருந்து செல்லும் புலம்பெயர் பணியாளர்களின் பாரிய அதிகரிப்பினைக் கவனத்தில் கொள்வது அவசியமானதாகும். 2015இல் இலங்கையின் புலம்பெயர் பணியாளர்கள் நாடும்
முதலத்தர சேருமிட நாடாக கட்டார் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு சுமார் 84622 இலங்கையர்கள்
வேறுபட்ட தொழில் துறைகளின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களின் மத்தியில்  தேர்ச்சியற்ற
தொழிலாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள  23000 வேலையாட்கள் (அண்ணளவாக) பிரதானமாக அம்பாறை
மட்டக்களப்பு  காலி  கண்டி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். i
 
உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்துவதற்கான நிர்ணயிப்பினை கட்டார் வெற்றியீட்டியதிலிருந்து  உட்கட்டமைப்புக்
கட்டுமானப் பணிகளில்  ஈடுபடுத்தப்பட்டுள்ள  இந்த புலம்பெயர் பணியாளர்களின் உரிமைகள் தொடர்ச்சியான முறையில்
மீறப்பட்டுள்ளமை சர்வதேச கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை,  மனித உரிமைகள் கண்காணிப்பகம்’  ‘சர்வதேச மனித உரிமைகள் சம்மேளனம் , ‘சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம்’ மற்றும் அதன் இணைப்புக்கள் போன்ற பலதரப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தாபனங்களினதும் புலம்பெயர்
பணியாளர்களின் தொழில் மற்றும் வாழ்கைத் தரங்களை மேம்படுத்தும் செயற்பாடுகளில்  ஈடுபடும்  உலகளாவிய
புலம்பெயர் வலைப்பின்னல்களினதும் வேண்டுகோள்கள் மற்றும் அழுத்தங்களைத் தொடர்ச்சியாக உதாசீனம் செய்துவரும் கட்டார் அரசாங்கம்ரூபவ் சர்வதேச தொழில் தாபனத்தினால்  சிபாரிசு செய்யப்பட்ட  சீர்திருத்தங்களையும்  வழிகாட்டல்களையும் கட்டார் அரசாங்கம் வேண்டுமென்றே கவணிக்காமல் இருக்கிறது.
கடினமானதும்  கண்டிக்கத்தக்கதுமான நிலைமைகளின் கீழ் தொழில்ரீதியாக புலம்பெயர்ந்தவர்கள் பணியாற்றுவதுடன்
பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களுக்கும் முகங்கொடுக்கின்றார்கள் என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.
எனினும்  ஆவணரீதியிலான சான்றுகள் இருந்தபோதிலும் அத்தகைய கோரிக்கைகள் அனைத்தையும் கட்டார் அரசாங்கம்
தொடர்ந்து மறுத்து வருகின்றது
.
உதாரணமாக  இலங்கையின் கிழக்குப் பகுதியிலிருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பிரகாரம்  கட்டாரில் இருந்து
60 சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டு இலங்கை வெளிநாட்டுத் தொழில் பணியகத்திற்கும் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் ஆண் புலம்பெயர் பணியாளர் ஒருவரின் பிரேதம் கட்டாரில் இருந்து அனுப்பப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்துள்ளார் என அந்நாட்டின் மருத்துவ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
 
எனினும் இம்மரணத்தில் சந்தேக நிலவுவதாகவும் இது தற்கொலையினால்; ஏற்பட்டதல்ல எனவும் மரணமடைந்தவரின் குடும்பம் சந்தேகிக்கிறது. அத்துடன் ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்கள் காரியாலயத் தொழில்களை வழங்குவதாக வாக்களித்துவிட்டு அந்நாட்டிற்கு சென்ற பின்னர் கட்டுமான பணியாளர்களாக அமர்த்தப்படும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும்
நடைபெறுகின்றன. வழங்கப்பட்டடுள்ள வேலையை விரும்பாததன் காரணமாக வேலையை விட்டுவிலகி சொந்த நாட்டிற்கு
திரும்புவதாயின் மேற்படி பணியாளரின் சொந்தப் போக்குவரத்துச் செலவிலேயே போகவேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இலங்கையின் புலம்பெயர் வேலையாட்கள் பலர் வெளியுலகத் தொடர்பற்ற நிலையில் சிக்குண்டுள்ளதும்  தாய்நாட்டில் தமது குடும்ப உறுப்பினர்களுடன் சகல தொடர்புகளை இழந்துள்ளதுமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.மரணமடைந்த பணியாளர்களின் பிரேதங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் நிகழ்வுகள் பெருமளவு உள்ளதுடன்
அத்தகைய மரண சம்பவங்களின் உண்மைத் தன்மைகளை மேலும் விசாரிப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை
அனுமதிப்பதற்கான நடைமுறைகள் அந்நாட்டில் இல்லை. இதையொத்த சூழ்நிலை தென் ஆசியாவின் முழுப் பிராந்தியத்தில்
உள்ள புலம்பெயர் பணியாளர்களுக்கு நிலவுவதுடன் இந்தப் பிரச்சனைகளைக் கவனத்தில் எடுத்து செயற்படுவதற்கான
முயற்சிகள் அனைத்தையும் கட்டார் நாடு தொடர்ந்து உதாசீனம் செய்து வருகிறது.
 
2017 நவம்பர் வரை கட்டார் குறித்த விசாரணை ஆணைக் குழுவொன்றினை நியமிப்பதற்கான தீர்மானத்தினை
சர்வதேசத் தொழில் தாபனம் பின்போட்டுள்ளது. ii முன்னொருபோதும் இல்லாதவாறு எண்ணற்ற டசின்கனக்கான
ஆதரவாளர்களை   ஜெனீவா கூட்டத்தொடருக்கு வரவழைத்து ஐ.நா. தாபனத்தின் பலம்வாய்ந்த பொறுப்புக்கூறும் நடைமுறையை
நிறுத்தி விடுவதற்கு கட்டார் முயற்சித்த போதிலும் விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை
சர்வதேச தொழில் தாபனத்தின் ஆட்சிக்குழு இன்னமும் பரிசீலித்துவருவதாக அறிவித்துள்ளது. iii
 
மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட தீர்மானமொன்றில்  தொழில் மற்றும் புலம்பெயர்வு சீர்த்திருத்தங்களை
அமுல்படுத்துவதில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்;து தகவல் வழங்குமாறு சர்வதேசத் தொழில்
தாபனம் கட்டார் தேசத்தைக் கோரியுள்ளது. புலம்பெயர் பணியாட்களின் பிரவேசம்  வெளியேற்றம் மற்றும்
வதிவிடம் தொடர்பில் 2015இன் 21ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 2017 ஜனவரி 4இன் 1ஆம் இலக்கச் சட்டம் 2017
பெப்ரவரி 8இன் உள்நாட்டு வேலையாட்கள் சட்டம் மற்றும் வேலையாட்களின் பிணக்குத் தீர்மானக் குழுக்களைத்
தாபிக்கும் 19 ஒக்ரோபர் 2016 சட்டங்கள் ஆகியன மீதான தகவலை இத்தீர்மானம் கோரி நிற்கிறது. இலங்கையின் புலம்பெயர் பணியாட்கள் கொண்டுவரும் அந்நியச் செலவாணி மூலமான வருமானம் மீது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிதுமே தங்கியுள்ள அதேவேளை  கட்டாரில் நடந்துகொண்டிருக்கும் உட்கட்டமைப்புக் கட்டுமானத் திட்டங்கள் அத்தகைய வருமானத்தின் மிகப் பிரதானமான அம்சமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே  கட்டாருக்கு உத்தேசமான ஆண் பணியாளர்களின் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதனை இலங்கை அரசாங்கம்
தொடரும் என்பது கண்கூடு. இந்நிலையில் சர்வதேச கடப்;பாடுகளுக்கு அமைவாகத் தனது நாட்டின் தொழில் சட்டங்களை விருத்திசெய்வதற்கு கட்டார் அரசாங்கம் முன்னெடுப்புக்களை எடுத்தாலன்றிரூபவ் மனிதத்தன்மையற்ற வேலை செய்யும்  நிலமைகளினதும்  சட்டங்களினதும் கீழ் இலங்கையின் புலம்பெயர் பணியாட்கள் மோசமாகப் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிடும்;.
 
எனவே நாம் பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கின்றோம்:
1. கட்டார் நாட்டில் புலம்பெயர் பணியாளர்களுக்கு எதிரான உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்காக ஒரு விசாரணை
ஆணைக்குழு அமைப்பதற்கும் அவ் விசாரண ஆணைக்;குழுவை முன்னெடுத்து செல்வதற்கும் சர்வதேச தொழில் தாபனத்தின்
ஆட்சிக் குழுவிற்கு வேண்டுகோள்விடுக்கின்றோம்.2. கட்டாரில் இடம்பெற்ற புலம்பெயர் பணியாளர்கள் மீதான உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான விசாரணை
 
ஆணைக்குழு நிறுவுவதற்கு சர்வதேச தொழில் தாபனம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஆதரித்து ஊக்கமளிக்குமாறு சர்வதேச தொழில் தாபனத்தின் இலங்கை காரியாலயத்திடம் வேண்டுகோள்விடுக்கின்றோம்.3. கட்டாரில் நிகழும் புலம் பெயர் பணியாட்கள் மீதான உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான விசாரணை
 
ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்காக சர்வதேச தொழில் தாபனம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள்விடுக்கிறோம்.
 
4. சர்வதேச நியமங்களுக்கு இணங்கி  இழைக்கப்பட்ட மீறல்கள் குறித்து விசாரணையை மேற்கொள்வதற்கான சுதந்திரமான
ஆணைக்குழுவை நியமிக்கும்; வரை கட்டாருக்கு உத்தேசமான பணியாட்களை அந்நாட்டிற்கு அனுப்புவதை நிறுத்துமாறு இலங்கை
அரசாங்கத்திற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-