News Update :

Wednesday, August 2, 2017

TamilLetter

அக்கரைப்பற்றில் யானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி..!

அக்கரைப்பற்றில் யானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி..!


அகமட் முகைதீன்

அம்பாறை- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிக்கம்பை வயல் பிரதேசத்தில் இன்று காலை யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆலையடிவேம்பு கோளாவில் பகுதியைச் சேர்ந்த 63 வயதான வைரமுத்து நடராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை அதிகாலை 12 மணியளவில் அலிக்கம்பை வயல் பிரதேசத்தில் வழமை போன்று காவல் கடமையின் நிமித்தம் பரன் குடிசை ஒன்றில் இவர் உறக்கத்திலிருந்தபோது யானை தாக்கியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இவரை அதிகாலை 3 மணியளவில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்திருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-