ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து சுயாதீன அணியாக எதிர்க்கட்சி வரிசையில் அமர தீர்மானித்துள்ளதாக அந்த அணியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் 12 பேரை கொண்ட முதலாவது அணி அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளதுடன் அதற்கான சுப நேரத்தை கணித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த அணி சில வாரங்களின் பின்னர் சுயாதீன அணியுடன் இணைந்து கொள்ளும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இதில் அடங்குவதாகவும் அந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.