News Update :

Tuesday, August 8, 2017

TamilLetter

விரைவில் நீர் கட்டணங்கள் அதிகரிப்பு




ஐந்து வருட காலத்திற்குள் நீர் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படாததன் காரணமாக நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மாத்தறை நீர் வளங்கள் திட்டத்தின் நான்காவது கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீர் கட்டணத் திருத்தமானது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அது நடைபெறாத நிலையில் ஐந்து வருடங்களாக நீர் கட்டண திருத்தம் நடைபெறவில்லை.

அதன் காரணமாக உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் நாட்டின் பல பிரதேசங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக கட்டண அதிகரிப்பில் தாமதத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதியின் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-