News Update :

Saturday, August 26, 2017

TamilLetter

அட்டாளைச்சேனையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு பதிலடி

அட்டாளைச்சேனையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு பதிலடி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழை எனும் தலைப்பில் நாளை (27) அட்டாளைச்சேனையில் பிரமாண்டமான அபிவிருத்தி நிகழ்வு நடைபெறவுள்ளது.

வீதி அபிவிருத்தி,வைத்தியசாலை கட்டிட திறப்பு விழா,மிருக வைத்தியசாலை கட்டிடம் திறந்து வைத்தல்,பல்தேவைக் கட்டிடம் திறந்து வைத்தல், வைத்தியர் விடுதி திறந்து வைத்தல், 5கோடி ரூபா நிதியில் விளையாட்டு மைதான அபிவிருத்தி என பல்வேறு திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கிம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

அத்தோடு அட்டாளைச்சேனை பிரதான வீதியில் கட்சியின் பொதுக் கூட்டமும் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர்  உரையாற்றவுள்ளனர்.

அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு மிகவும் மோசமான வார்த்தை பிரயோகங்களால் முன்னாள் அமைச்சர் பேசியுள்ளதுடன் பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார்.இதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென கட்சியின் போராளிகள் நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவிடம் தமது ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்சியின் போராளிகளின் மனோநிலைக்கேற்ப பேசக் கூடிய பேச்சாளர்களை தெரிவு செய்வதில் நிகழ்ச்சிக் குழு  மும்முரம்காட்டி வருகின்றது,
.
அந்த வகையில ;கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு செயலாளருமான ஏ.எல்.தவம் மற்றும் சுகாதார அமைச்சர் நஸீர் ஆகியோர்களது  பேச்சு அதாஉல்லாவிற்கான பதலடியாக அமையுமென போராளிகள் எதிர் பார்க்கின்றனர்.



TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-