ஏறாவூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, யார் மிகச் சிறந்த பங்காளரோ அவருடன் இணைந்து கூட்டு முயற்சியாக அரசாங்கம் செயற்படும். ஆனால் திருகோணமலைத் துறைமுகம் யாருக்கும் விற்கப்படாது.
நீண்டகால குறுகிய கால நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடன்கள் மீளச் செலுத்தப்பட்டு, வருமானம் அதிகரிக்கப்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறினார்.