ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நீதி அமைச்சராக தலதா அத்துகோரளவும், புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்ரம பெரேராவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அமைச்சரவை முடிவை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகவும், நீதியமைச்சிற்கான செயற்பாடுகளை வினைத்திறனற்ற வகையில் மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நடத்தப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒன்றுகூடலைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜேதாச ராஜபக்சவின் அமைச்சுப் பதவியை நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.
அதற்கமைய விஜேதாச ராஜபக்ச வகித்து வந்த அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த நிலையிலேயே இன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த தலதா அத்துகோரள நீதியமைச்சராகவும், வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா புத்தசாசன அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.