News Update :

Thursday, August 17, 2017

TamilLetter

அக்கரைப்பற்று பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு- ஒருவர் கைது




அக்கரைப்பற்று பிரதேசத்தில்  விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு- ஒருவர் கைது

அக்கரைப்பற்று - அளிகம்பை முகாம் கடை பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று - சாகாமம் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைதானவர் அக்கரைப்பற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-